நடிகராக மாறிய தளபதி வாரிசு – சம்பவம் இருக்கும் போல

நடிகராக மாறிய தளபதி வாரிசு – சம்பவம் இருக்கும் போல
  • PublishedFebruary 22, 2026

பிரபலமான நடிகராக இருக்கும் விஜயின் மகன் என்பதால் கண்டிப்பாக ஜேசன் சஞ்சய் ஒரு நடிகராக சினிமாவில் அறிமுகமாவார் என பலரும் எதிர்பார்த்தார்கள்.ஆனால் அவரோ எனக்கு நடிப்பில் ஆர்வமில்லை.. இயக்கத்தில்தான் ஆர்வம் என குடும்பத்தினரிடமும் சொல்லிவிட்டார்.

இதன்படி ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள படத்திற்கு சிக்மா என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் சந்திப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் வீடியோ போன வருடம் டிசம்பர் மாதம் வெளியானது.

இந்நிலையில் நடிப்பில் தனக்கு ஆர்வமில்லை என சொல்லி எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய் சிக்மா படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாடியிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.. அது உண்மையா இல்லையா என்பது படம் வெளியான பின்னரே தெரியவருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *