“நல்ல தயாரிப்பாளர். சிறந்த இயக்குநர்” – கமல் புகழாரம்

“நல்ல தயாரிப்பாளர். சிறந்த இயக்குநர்” – கமல் புகழாரம்
  • PublishedFebruary 20, 2026

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள “தாய் கிழவி” திரைப்படம் தற்போது திரையுலகில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த நடிகர் கமல் ஹாசன், படக்குழுவினரை பாராட்டிய விதம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் படம் குறித்து”நல்ல தயாரிப்பாளர் சிறந்த இயக்குநர்” என்று கமல் பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்  சினிமாவில் அனுபவம் வாய்ந்த நடிகராக உள்ள கமல் ஹாசனின் இந்த பாராட்டு,படத்திற்கு கூடுதல் மரியாதையை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

நடிகராக வெற்றி கண்ட சிவகார்த்திகேயன், தயாரிப்பாளராகவும் தனது தனித்துவத்தை நிரூபித்து வருகிறார். இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர், பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் தனது திறமையை நிரூபித்துள்ளார். அந்தவகையில் தாய்க்கிழவி திரைப்படம் ராதிகாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 27ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *