பசங்க திரைப்பட நட்சத்திரத்திற்கு திருமணம் முடிந்தது!
பசங்க திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கிஷோர். இந்த திரைப்படத்திற்கு பிறகு கோலிசோடா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் நீண்டகாலமாக சின்னத்திரை நடிகையான ப்ரீத்தி குமார் என்பவரை காதலித்து வந்தார். தற்போது அவர்களுடைய திருமணம் சென்னையில் எளிமையாக நடைபெற்றுள்ளது.
உற்றார், உறவினர்கள். நண்பர்கள் மாத்திரமே இவர்களுடைய திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். இந்த தகவலை தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள அவர், கதை தொடங்குகிறது என்ற கேப்ஷனுடன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.