விக்ரம் நிராகரித்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகர்
ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் வாரணாசி படத்தில் கிச்சா சுதீப் இணையப் போகிறார் என்ற செய்தி வாரணாசி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் சீயான் விக்ரம் நடிக்க மறுத்த கேரக்டரில் கிச்சா சுதீப்பை நடிக்க வைக்க ராஜமெளலி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது படக்குழுவினரிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்றாலும், இதுகுறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.