விராட் கோலியையே ஓரம் கட்டிய ராஷ்மிகா – என்னவாக இருக்கும்.

விராட் கோலியையே ஓரம் கட்டிய ராஷ்மிகா – என்னவாக இருக்கும்.
  • PublishedFebruary 28, 2026

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமணம் கடந்த 26ஆம் திகதி கோலாகலமாக நடைபெற்றது. பிரமாண்ட அலங்காரங்கள், பாரம்பரிய சடங்குகள், நவீன ஸ்டைல் கொண்ட இந்த திருமண விழா, திரையுலகில் மிகுந்த கவனத்தை ஈர்த்ததாக கூறப்படுகிறது.

திருமண விழாவிற்காக சுமார் 3 கிலோ தங்கம் உருக்கப்பட்டு நகைகள் தயாரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை மணமக்கள் அணிந்திருந்த ஆடை மற்றும் நகைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

திருமண புகைப்படங்களை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததும், ரசிகர்களின் லைக்குகளும் கமெண்ட்ஸ்களும் குவிந்தன. இதுவரை அந்த பதிவிற்கு 24.2 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த எண்ணிக்கை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு கோப்பையை முத்தமிடும் புகைப்படத்தை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படத்திற்கு 22.9 மில்லியன் லைக்குகள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

தற்போது ராஷ்மிகாவின் குறித்த திருமண புகைப்படங்கள் அதைவிட அதிகமான லைக்குகளை பெற்றதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *