100 கோடி பட்ஜெட்.. 18 மொழிகளில் ரிலீஸ் – ஜெயம் ரவியின் 32ஆவது படம்!

100 கோடி பட்ஜெட்.. 18 மொழிகளில் ரிலீஸ் – ஜெயம் ரவியின் 32ஆவது படம்!
  • PublishedMarch 22, 2023

ஜெயம் ரவியின் 32ஆவது படம் குறித்த தகவல் வெளியாகி கோலிவுட்டை வாய் பிளக்க வைத்துள்ளது. அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. ஜெயம் படத்தை ரவியின் அண்ணன் ராஜா இயக்கியிருந்தார். அதன் பிறகு ஜெயம் ரவி நடித்த படங்களும் தொடர்ந்து ஹிட்டடித்தன. இதனால் முன்னணி நடிகர்கள் வரிசையில் இணைந்தார் ஜெயம் ரவி.

ஜெயம் ரவி பல வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் ஜெயம் ராஜாவின் அரவணைப்பிலேயே வளர்ந்துவந்த ஜெயம் ரவி அதன் மூலம் டீசண்ட்டான படங்களை கொடுத்தார். இதனையடுத்து தனித்து கதைகளை கேட்க ஆரம்பித்து அதில் நடித்த ஜெயம் ரவிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்த படம் பேராண்மை. மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய அந்தப் படம் மெகா ஹிட்டானது.

ஜெயம் ரவியை வைத்து ரீமேக் படங்களை மட்டுமே இயக்கிவந்த ராஜா முதல்முறையாக விஜய்க்காக சொந்த கதை எழுதி வேலாயுதம் படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் கதை விவாதத்திலும் ஜெயம் ரவி பங்கேற்றிருக்கிறார். வேலாயுதம் படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ரவிக்கென்று சொந்தமாக கதை எழுதி தனி ஒருவன் படத்தை இயக்கினார் ராஜா. அந்தப் படம் மெகா ஹிட்டானது.

பேராண்மை படம் எப்படி மெகா ஹிட்டானதோ அதேபோல் தனி ஒருவன் படமும் மெகா ஹிட்டானது. இதனையடுத்து ரவி கோலிவுட்டில் கவனிக்கப்படும் ஹீரோவாக மாறினார். அதுமட்டுமின்றி அனைத்து ஹீரோக்களுடனும் நட்பாக பழகக்கூடியவர் என்ற பெயரை பெற்ற ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அருண்மொழி சோழனாக கலக்கிய ஜெயம் ரவி பலரது பாராட்டை பெற்றார்.

ஜெயம் ரவி கல்யாண் இயக்கத்தில் சமீபத்தில் அகிலன் படத்தில் நடித்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. இதனையடுத்து அவர் சைரன் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை அந்தோணி பாக்கியராஜ் இயக்குகிறார். ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில் ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரவி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயம் ரவியின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரவியின் 32ஆவது படமாக உருவாகும் அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது.அதுமட்டுமின்றி 18 மொழிகளில் வெளியாகவிருக்கிறது என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் எனவும் பேச்சு எழுந்திருக்கிறது. சூர்யா 42 படம் 10 மொழிகளில் வெளியாகவிருக்கும் சூழலில் ரவியின் படம் 18 மொழிகளில் வெளியாகவிருப்பதாக வந்திருக்கும் தகவல் கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *