இயக்குனர் பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா நடித்துள்ள திரைப்படம் ‘கேடி – தி டெவில்’. இந்த படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
கேடி தி டெவில் திரைப்படம் 1970-களில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் ஏற்படுத்தியுள்ளது.
இதில் நடிகை ஷில்பா ஷெட்டி குந்த்ரா, சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.