தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் படங்கள் – குவியும் வாழ்த்துக்கள்
70வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மொழிக்குமான சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு இந்த ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்திற்கு மொத்தம் 4 விருதுகள் வழங்கப்பட்டது.
சிறந்த திரைப்படத்திற்கான விருது – இந்த விருதினை படத்தின் தயாரிப்பாளர்களான லைகா சுபாஸ்கரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் உரிமையாளர் மணிரத்னம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மணிரத்னம் இந்தப் படத்தின் இயக்குநர் என்பதும் கவனிக்கத்தக்கது.
சிறந்த இசை அமைப்பாளர் – பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு இசை அமைத்தற்காக இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது பெற்றுக் கொண்டார்.
சிறந்த ஒளிப்பதிவாளர் – சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுனை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் பெற்றுக் கொண்டார். சிறந்த இசை வடிவமைப்பு – சிறந்த இசை வடிவமைப்புக்காக பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு இசை வடிவமைத்த ஆனந்த் கிருஷ்ண மூர்த்தி பெற்றுக் கொண்டார்.
அதேபோல் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக நித்யா மேனனுக்கும், படத்தில் இடம் பெற்றுள்ள மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக நடன இயக்குநர் சதீஷ்குமாருக்கு விருது வழங்கப்பட்டது.
கன்னட சினிமாவில் கே.ஜி.எஃப் 2 படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்ததற்காக ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பு மணி மற்றும் அறிவு மணி ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இவர்களை சினிமா உலகில் அன்பறிவ் என்று அழைக்கின்றனர்.
அதேபோல், காந்தாரா படத்தினை இயக்கி நடித்திருந்த கிருஷ்ணரின் வராக ரூபத்தை கடவுளாக வணங்கும் மக்களின் வாழ்வியல் படமாக உருவான காந்தாரா படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த படத்திற்கான விருதினை படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரிகந்தூர் பெற்றுக்கொண்டார். அந்த படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நாயகனுக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
விருது வென்றவர்களுக்கு ரசிகர்கள் தொடங்கி திரைத்துறையினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.