தங்கச்சிலை ஊர்வசி ரவுடேலாவுக்கு தங்கத்தால் கேக்… கொடுத்தது யார் தெரியுமா?

தங்கச்சிலை ஊர்வசி ரவுடேலாவுக்கு தங்கத்தால் கேக்…  கொடுத்தது யார் தெரியுமா?
  • PublishedFebruary 26, 2024

3 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 கரட் தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங் நடிகை ஊர்வசி ரவுடேலாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

தற்போது பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து ‘செகண்ட் டோஸ்’ என்கிற மியூசிக் ஆல்பத்தில் பணியாற்றி வரும் ஊர்வசி ரவுடேலாவுக்கு தங்க கேக்கை அவர் பரிசளித்துள்ளார்.

இதற்காக யோ யோ ஹனி சிங்கிற்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசி பதிவிட்டுள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை, ஊர்வசி ரவுடேலா உண்மையிலேயே உலகின் மிக அழகான பெண், நான் அதை பல முறை கூறியிருக்கிறேன். அவள் மிகவும் அழகான பெண், அதனால்தான், நான் 3 கோடி மதிப்பிலான இந்த கேக்கை அவளுக்காக வாங்க முடிவு செய்தேன்” என்று யோ யோ ஹனி சிங் தெரிவித்துள்ளார்.

சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. அதன்பின்னர் பெங்காலி, கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் ‘தி லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா பிரபலமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *