விஜய்யின் இலங்கை விஜயத்திற்கு என்ன நடந்தது? ரஷ்யா பறக்க திட்டம்

விஜய்யின் இலங்கை விஜயத்திற்கு என்ன நடந்தது? ரஷ்யா பறக்க திட்டம்
  • PublishedFebruary 26, 2024

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக தி கோட்.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யுடன் பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் கடைசி வாரத்தில் நிறைவு பெறும் என கூறப்பட்டது. இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பை ரஷ்யா நகரில் 35 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

வருகின்ற நாட்களில் இதற்காக படக்குழு ரஷ்யாவிற்கு பயணிக்க உள்ளனர்.

எனினும் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதை உண்மையாக்கும் வகையில் வெங்கட் பிரபு கடந்த மாதம் இலங்கையில் முகாமிட்டிருந்தார். இவர் கோட் படத்திற்காக லொகேஷன் தேடுவதாகவும், விஜய் இலங்கைக்கு வருவார் என்றும் செய்திகள் வெளிளியாகின.

எனினும் இது எதுவும் நடக்கவில்லை. படக்குழு தற்போது ரஷ்யா பறப்பதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *