புத்தாண்டை குறிவைத்து களமிறங்கும் 5 படங்கள்!
சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஐந்து திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. இதன்படி ருத்ரன், பிச்சைக்காரன் 2, பார்டர், சகுந்தலம், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களே இவ்வாறு வெளியாகவுள்ளன.
ருத்ரன்: ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகும் நடித்திருக்கும் படம் ருத்ரன். பைவ் ஸ்டார் கதிரவன்அறிமுகமாகும் ருத்ரன் படத்தை தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
பிச்சைக்காரன் 2:கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரே இந்த படத்தை இயக்கியும் தயாரித்து உள்ளார்.
பார்டர்: இயக்குனர் அறிவழகன் இயக்கி ஆல் இன் ஒன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பார்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் திகதி ளெியாகவுள்ளது.
சகுந்தலம்: தெலுங்கு முன்னணி இயக்குனரான குணசேகரன் இயக்கத்தில் காளிதாசன் எழுதிய புராணத்தில் உள்ள சகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் வரும் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.
துருவ நட்சத்திரம்: கௌதம் மேனன்-விக்ரம் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நின்றது மீண்டும் அதன் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு சமீபத்தில் தான் நிறைவடைந்துள்ளது. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வரும் ஏப்ரல் 14ஆம் திகதி வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.