50 வயசாச்சி, ஆனா இன்னும் கிஸ் அடிக்க தெரியாதா? : முன்னணி நடிகரை வம்புக்கு இழுத்த பயில்வான்!

50 வயசாச்சி, ஆனா இன்னும் கிஸ் அடிக்க தெரியாதா?  : முன்னணி நடிகரை வம்புக்கு இழுத்த பயில்வான்!
  • PublishedJune 21, 2023

சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போனவர் தான் பயில்வான் ரங்கநாதன். இவருடைய பார்வையில் இருந்து எந்த பெரிய நடிகரும், ஓடவும் முடியாது ஒழியவும், முடியாது என்றுதான் கூறவேண்டும்.

அந்த வகையில் தற்போது மிகப் பெரிய நடிகர் ஒருவரையும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.  பிரபல ஹீரோ ஒருவரிடம் நேருக்கு நேராக ‘இதெல்லாம் ஒரு கிஸ்ஸா?’ என்று கேவலப்படுத்தி இருக்கிறார்.

அதாவது,  எஸ்ஜே சூர்யா  ஹீரோவாக நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் பொம்மை. ஒரு பொம்மையின் மீது காதல் கொள்ளும் இளைஞனின் மனச்சிதைவு,  அதன் பிறகு ஏற்படும் விளைவு தான் இந்த படத்தின் கதையாக உள்ளது.

இதன் ட்ரெய்லர் வெளியாகும் போதே கதாநாயகி பிரியா பவானி ஷங்கருக்கு எஸ்ஜே சூர்யா லிப் டு லிப் கிஸ் அடித்த காட்சி இடம் பெற்றிருக்கும்.

sj-suriya-peiya-bhavani-cinemapettai

ஆனால் படம் ரிலீஸ் ஆனதும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எஸ்ஜே சூர்யாவிடம் ’50 வயசு ஆயிடுச்சு இன்னும் சிங்கிளாக இருக்கும் உங்களுக்கு கிஸ் கூட அடிக்க தெரியாதா?  பொம்மை படத்தில் நீங்க அடித்தது கிஸ்ஸா!’ என பொதுவெளியில் எஸ்ஜே சூர்யாவின் முகத்து  நேராகவே கேட்டு அசிங்கப்படுத்தினார்.

இதற்கு எஸ்ஜே சூர்யா சிரித்துக்கொண்டே எந்த பதிலும் சொல்லவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *