சத்தமின்றி, ஆர்ப்பாட்டமின்றி வந்து சாதனை மாஸ் காட்டிய “சித்தா”

சத்தமின்றி, ஆர்ப்பாட்டமின்றி வந்து சாதனை மாஸ் காட்டிய “சித்தா”
  • PublishedOctober 4, 2023

ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2, ஜெயம் ரவியின் இறைவன் படங்களுக்குப் போட்டியாக களமிறங்கிய சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில், படத்தின் பட்ஜெட்டுக்கு இரண்டு மடங்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.

அருண் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் சித்தா.

மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக திரையுலகில் தனது கேரியரை தொடங்கியவர் சித்தார்த். ஆனால், ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் சாக்லெட் ஹீரோவாக கலக்கிய சித்தார்த், இதுவரை மிகப் பெரிய மாஸ் ஹிட் படங்கள் கொடுத்ததில்லை. அதேநேரம் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அந்தவகையில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சித்தார்த் நடித்த திரைப்படம் சித்தா. அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நாயகனாக நடித்துள்ள சித்தா, கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படம் முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது.

Child Abuse எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது சித்தா. Child Abuse பற்றி இதுவரை பேசாத புதிய கோணத்தில் சித்தா உருவாகியுள்ளதாக ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.

அதேபோல், சித்தார்த்தின் எமோஷனலான நடிப்பு, சமூகத்திற்கு சொல்ல வந்த மெசேஜ் என எல்லாவிதத்திலும் சித்தா ரசிகர்களிடம் ரீச்சானது. குட் டச், பேட் டச் பற்றி பெண் குழந்தைகள் தெரிந்துகொள்ள சித்தா படத்தை குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என பலரும் பாராட்டியிருந்தனர்.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற சித்தா, பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனிலும் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சித்தா, இதுவரை இரண்டு மடங்கு லாபம் கொடுத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, சித்தா திரைப்படம் முதல் 5 நாட்களில் 12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த வாரம் வெளியான படங்களில் சித்தா தான் ரசிகர்களின் வரவேற்புடன் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2, ஜெயம் ரவியின் இறைவன் படங்களுக்கு அதிகம் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சைலண்டாக ரிலீஸான சித்தா விமர்சன ரீதியாகவும் வசூலிலும் மாஸ் காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *