கமல் அதிரடி முடிவு… கைவிடப்படும் படங்கள்! இனி அவ்ளோ தான்…
இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் கமல்ஹாசன், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். 1981ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இப்போதும் வெற்றிகரமாக பல படங்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இனி ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் படங்கள் தயாரிக்கப் போறதில்லை என கமல் முடிவு செய்துள்ளாராம்.
விஸ்வரூபம், தூங்காவனம், உத்தம வில்லன் போன்ற படங்கள் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் வெளியாகி தோல்வியடைந்தன. இதனால் துவண்டு கிடந்த கமலுக்கு விக்ரம் திரைப்படம் மூலம் தரமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கிடைத்தது.
இதனால் உற்சாகமான கமல்ஹாசன், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை உடனடியாக தொடங்கினார். அதேபோல் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்திலும் கமிட்டாகியுள்ளார் கமல்ஹாசன்.
இதுதவிர சிவகார்த்திகேயனின் எஸ்கே 21, சிம்புவின் STR 48 படங்களும் ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் தயாராகி வருகின்றன. இதில் STR 48 பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஹெச் வினோத் இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் KH 233 படம் உருவாகவிருந்தது. ஆனால், திடீரென அதனை கமல் ட்ராப் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், எஸ்கே 21, STR 48-க்குப் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் படங்கள் தயாரிக்கப் போவதில்லை என கமல் முடிவு செய்துள்ளாராம். இதனால் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் உருவாகவிருந்த சில படங்கள் கைவிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, ராஜ்கமல் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து மகேந்திரன் நீக்கப்படவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அவருக்குப் பதிலாக இனிமேல் ராஜ்கமல் நிர்வாகத்தை சுஹாசினி பார்த்துக்கொள்வார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், இதுபற்றிய முழுமையான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் கமல் அரசியலில் தீவிரமாக களமிறங்குவதால் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் முடிவுக்கு வருகிறதா எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.