இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு வந்த தற்கொலை எண்ணம்… இறுதியில் என்ன நடந்தது?

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு வந்த தற்கொலை எண்ணம்… இறுதியில் என்ன நடந்தது?
  • PublishedJanuary 11, 2024

கோலிவுட்டில் இளையராஜாவுக்கு எதிராக களமிறக்கிவிடப்பட்டவர் தான் ஏ.ஆர்.ரகுமான்.

முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களை பிரமிக்கவைத்த இவர், அதன் பின் பல ஹிட் ஆல்பம் கொடுத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான் ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் ரசிகர்களுக்கு அறிவுரை கொடுத்துள்ளார். அதில் அவர், ‘எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றியபோது, என்னுடைய அம்மா, “நீ மற்றவர்களுக்காக வாழும் போது அந்த மாதிரியான எண்ணம் தோன்றாது” என என்னிடம் கூறினார்’.

‘உண்மையில் நீங்கள் பிறருக்காக வாழும்போது சுயநலமாக இருக்கமாட்டீர்கள். ஒருவருக்காக இசையமைப்பதாக இருக்கலாம். உணவு வாங்கி கொடுக்கலாம் அல்லது வெறும் புன்னகையை கூட உதிர்க்கலாம்.

இந்த மாதிரியான விஷயங்கள் தான் வாழ்க்கையுடன் உங்களை பயணிக்க வைக்கும்’ என்று ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *