ஸ்ரீவித்யா, கமல்ஹாசன் திருமணத்திற்கு நடிகையின் அம்மா ஒப்புக்கொள்ளாதது ஏன்?

ஸ்ரீவித்யா, கமல்ஹாசன் திருமணத்திற்கு நடிகையின் அம்மா ஒப்புக்கொள்ளாதது ஏன்?
  • PublishedJanuary 11, 2024

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யா மற்றும் கமல்ஹாசனின் காதல் குறித்து நிறைய பேசப்படுகிறது.

ஸ்ரீவித்யா ஒருபக்கம் எனது அம்மா கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை, எனவே நாங்கள் பிரிந்துவிட்டோம், ஆனால் அவர் கல்யாணம் செய்த விஷயம் கேட்டு வருத்தமடைந்ததாக கூறியிருந்தார்.

கமல்ஹாசன் ஒரு பேட்டியில், அவர் எனது காதலி தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் திருமணத்தில் தான் முடியவில்லை என்றார்.

கமல்-ஸ்ரீவித்யா காதல் திருமணத்தில் முடியாததற்கு காரணமே நடிகையின் அம்மா தான். அவர் இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்காதது ஏன் என நடிகையின் அண்ணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதில் அவர் பேசும்போது, ஸ்ரீவித்யா காதல் குறித்து அவரது அம்மாவிடம் பேசும்போது அவருக்கு வயது 21, கமல்ஹாசனுக்கு 20 தான் ஆனது.

இருவரும் சினிமாவில் அப்போது தான் தங்களுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள், அதனால் இந்த நேரத்தில் திருமணம் செய்தால் சரியாக இருக்காது என்று தான் மறுத்துவிட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *