“கங்குவா படத்திற்காக எனது கடைசி ஷாட்” சூர்யா கொடுத்த அப்டேட்…

“கங்குவா படத்திற்காக எனது கடைசி ஷாட்” சூர்யா கொடுத்த அப்டேட்…
  • PublishedJanuary 11, 2024

இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் “கங்குவா” படம் பத்து மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இதில் நடிகர் சூர்யா, திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் 3டி முறையில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கங்குவா படத்தில் தனக்கான காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டு விட்டதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது X பக்கத்தில் படப்பிடிப்பு குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், “கங்குவா படத்திற்காக எனது கடைசி ஷாட்டில் நடித்து முடித்தேன். படக்குழுவினர் அனைவரிடமும் நல்ல எண்ணங்களே நிரம்பி இருந்தது. இது ஒன்றின் நிறைவு, ஆனால் பலவற்றுக்கான துவக்கமும் கூட. இயக்குனர் சிவா மற்றும் குழுவினருக்கு எனது நன்றிகள்.”

“கங்குவா மிகப்பெரிய படம், அது எனக்கு மிகவும் விசேஷமானது. இதை நீங்கள் பெரிய திரையில் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியவில்லை,” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *