“இது எல்லாத்துக்குமே காரணம் அவருதான்…” வைரலாகும் நயன்தாராவின் பேச்சு

“இது எல்லாத்துக்குமே காரணம் அவருதான்…” வைரலாகும் நயன்தாராவின் பேச்சு
  • PublishedJanuary 10, 2024

நடிகை நயன்தாரா சினிமாவில் நடிப்பதை தாண்டி தயாரிப்பு நிறுவனம் அழகு சாதன பொருட்கள் விற்பனை, சானிட்டரி நாப்கின் என தொழிலதிபராக மாறி வருகிறார்.

சமீபத்தில் Femi9 எனும் புதிய வகை பிராண்ட் சானிட்டரி நாப்கினை அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில், அந்த சானிட்டரி நாப்கினை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர்களை பாராட்டி நடத்தப்பட்ட விழாவில் நடிகை நயன்தாரா படு போல்டாக பேசி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

மேலும், இன்னமும் நம் நாட்டில் பெண்கள் மத்தியில் சானிட்டரி நாப்கின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு சரியாக சென்று சேரவில்லை என்றே நினைக்கிறேன் என்றும் இந்த பிசினஸ் மூலம் லாபம் வருவது சுயநலம் தான் என்றாலும், அதில் பெண்களுக்கான பொதுநலம் தான் அதிகம் கலந்திருக்கிறது என பஞ்ச் வைத்து பேசி பலரது கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார்.

ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது கோமதி மேமை பார்த்துத் தான் தெரிஞ்சுக்கிட்டேன் என பேசிய நயன்தாராவின் பேச்சு தீயாக பரவி வருகிறது.

நடிகை நயன்தாரா சானிட்டரி நாப்கின் பிசினஸ் செய்வது சமூக சேவைக்கா எல்லாம் பணம் சம்பாதிக்கத்தானே என சிலர் சொல்வார்கள். ஆமாம், இதில் சுயநலம் இருக்கு, ஆனால், அதற்கு பின்னால் இருக்கும் பொதுநலம் தான் இங்கே நம்மை எல்லாம் ஒன்றாக இணைந்திருக்கிறது என அதிரடியாக பேசியுள்ளார்.

இதன் மூலம் வரும் லாபம் தனக்கு முக்கியமில்லை என்றும் ஆரோக்கியமான சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு பெண்களை சென்று சேர்ந்தால் போதும் எனக் கூறியுள்ளார்.

இங்கே நிற்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது என பேசிய நயன்தாரா கணக்கு தப்பா இல்லைன்னா இதுவரை ஒரு கோடி சானிட்டரி நாப்கின்களை விற்றுள்ளோம்.

இந்த சாதனைக்கு நீங்கள் அனைவரும் போட்ட பெரும் உழைப்பு தான் காரணம் என Femi9 ஊழியர்கள் மற்றும் அதற்கு சம்பந்தப்பட்டவர்களை ஊக்குவித்து நயன்தாரா பேசியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *