பெரிய பட்ஜெட் படங்களுடன் மோதிய “மிஷன்” நிலை என்ன?
சமீபகாலமாக அருண் விஜய்யின் படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இன்று அவருடைய மிஷன் படம் வெளியாகி இருக்கிறது.
இந்த பொங்கல் பண்டிகைக்கு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் என பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் சமயத்தில் மிஷன் படமும் ரிலீஸாகி இருக்கிறது.
விஜய் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அதாவது அருண் விஜய் தன்னுடைய குழந்தையின் மருத்துவ செலவுக்காக லண்டன் செல்கிறார்.
அந்த நேரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் நடக்கும் மாநாடை தடுக்க முற்படுகின்றனர்.
இந்த சம்பவம் நடக்க இருப்பது இந்திய அரசுக்கு தெரிய வரும் நிலையில் அவர்கள் லண்டனுக்கு செல்கின்றனர். அப்போது தீவிரவாதிகளின் கும்பல் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
அந்த சமயத்தில்தான் எதிர்பாராத விதமாக தீவிரவாதிகளின் கும்பலில் அருண் விஜயையும் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு செல்கிறார்.
அங்கு ஜெயிலராக நடிகை எமி ஜாக்சன் இருக்கிறார். இந்த சூழலில் தீவிரவாதிகளை வெளியே கொண்டு வர சிறை முழுவதையும் ஒரு குழு சூழ்ந்து கொண்டது. இந்த விஷயம் அனைத்தையும் தெரிந்து கொண்ட அருண் விஜய் அவர்களை வெளியே விடக்கூடாது என்று முயற்சி செய்கிறார். கடைசியில் அதில் வெற்றி பெற்றாரா என்பது தான் மிஷன் படத்தின் கதை.
முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளாக நிறைந்துள்ள இந்த படம் ரசிகர்களை போதிய அளவில் கவரவில்லை. ஏனென்றால் முன்பே பார்த்த பழைய தீவிரவாதி படங்களின் சாயலில் தான் இந்த படமும் அமைந்திருக்கிறது. மிஷன் பொறுத்த வரையில் அருண் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான்.