சூடுபிடிக்கும் GOAT பட பிசினஸ்… பெருந்தொகை கொடுத்து தட்டிதூக்கிய பிரபல நிறுவனம்?

சூடுபிடிக்கும் GOAT பட பிசினஸ்… பெருந்தொகை கொடுத்து தட்டிதூக்கிய பிரபல நிறுவனம்?
  • PublishedJanuary 13, 2024

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் GOAT திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படம் GOAT. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் GOAT படத்தையும் தயாரிக்கிறது.

இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒன்று வயதான கேரக்டர் மற்றொன்று இளம் வயது கதாபாத்திரம். அதில் விஜய் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் காட்சிகளை டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி தளபதியை இளமையாக காட்டும் முயற்சியில் படக்குழு இறங்கி உள்ளது.

இதற்காக நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் வெங்கட் பிரபு உடன் அமெரிக்கா சென்று சில லுக் டெஸ்ட்டை கொடுத்து வந்தார்.

கோட் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, பின்னர் தாய்லாந்து, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங்கை நடத்தியது. தற்போது விஜய் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அதற்காக கிளீன் ஷேவ் செய்து யங் லுக்கிற்கு மாறி இருக்கிறார் விஜய். இந்த நிலையில் GOAT படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி GOAT படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இது பான் இந்தியா படமாக உருவாகி வருவதால் இதன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளுக்கான உரிமையை மட்டும் ரூ.125 கோடி விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இதுதவிர இந்தி உரிமையை தனி ஒரு தொகைக்கு விற்கும் ஐடியாவில் படக்குழு உள்ளதாம். இதனால் விஜய்யின் கெரியரில் அதிக தொகைக்கு விற்பனையான படமாக GOAT இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *