“ஒரு சரியான நபரை தேர்வு செய்ய வேண்டும்” அப்போ பிரியங்கா கணவனை பிரிந்தது உண்மையா?
விஜே பிரியங்கா விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாகவே இருக்கிறார். இவர் விஜய் டிவியில் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை. எப்போதுமே ஜாலியாக பேசக்கூடியது தான் அவருடைய பிளஸ் பாயிண்ட்.
எந்த நேரத்திலும் தன்னை யார் கலாய்த்தாலும் அதை கண்டு கோபப்படாமல் அதை சகஜமாக எடுத்துக்கொண்டு சிரித்தபடியே பலரையும் கலாய்த்து கொண்டிருக்கும் பிரியங்கா, விஜய் டிவியில் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்துக் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இவர் பிக் பாஸ் சீசன் ஐந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார்.அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரியங்காவிற்கு ரசிகர்கள் கூட்டம் மேலும் அதிகரித்தது.
2014 ஆம் ஆண்டு விஜய் டிவியில் வேலை செய்யும் பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால்,சில காலமாக பிரியங்கா பிரவீனை விவாகரத்து செய்துவிட்டு தனியாக அவருடைய அம்மா வீட்டில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியானது. இது உண்மை என்பது போல பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா, தனது கணவர் பற்றி ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லை.
இந்நிலையில் பிரியங்கா தொகுப்பாளினியாகி 15ஆண்டுகள் ஆனதை யொட்டி யூடியூப் சேனல் ஒன்று, பிரியங்கா மற்றும் அவரது அம்மாவிடம் பேட்டி எடுத்தது. அதில் பேசிய பிரியங்காவின் அம்மா, பிரியங்காவிற்கு 11 வயது இருக்கும்போது அவரது தந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அதன் பிறகு இருவரையும் வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் பிரியங்கா, ஒரு ஆண்போல இருந்து மொத்த குடும்ப பொறுப்பையும் தோளில் சுமந்தால் அவள் இல்லை என்றால், இந்த குடும்பம் இந்த இடத்திற்கு வந்து இருக்காது.
இப்போது தான் அவள் சம்பாதிக்கும் பணமே அவளில் வங்கி கணக்கிற்கு செல்கிறது. அதற்கு முன், பணம் எவ்வளவு வந்தது, என்ன சம்பளம் என எதை பற்றியும் அவள் ஒரு வார்த்தைக்கூட கேட்டது இல்லை.
அந்த மனசு எனக்கூட வராதது, யாரும் வருத்தப்படக்கூடாது என்பதில் அவள் கவனமாக இருப்பாள் என்றார். மேலும், அவள் வாழ்க்கையில் ஒரு தவறு செய்துவிட்டால், அது எனக்கு ரொம்ப கஷ்டத்தை கொடுத்தது.
இனிமேல் அந்த தவறை செய்யாமல் ஒரு வாழ்க்கை சரியான நபரை தேர்வு செய்ய வேண்டும். எதுவாக இருந்தாலும், சிறப்பான சரியானதை தேர்வு செய்ய வேண்டும். அவளது கண் கலங்கினால் எனக்கு வலிக்கிறது என்று கண்ணீருடன் பேசினார்.