அயலான், கேப்டன் மில்லர் வசூல் எல்லாம் பொய்யா? இது என்ன புது டுவிஸ்ட்டா இருக்கே…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த அயலான் மற்றும் கேப்டன் படங்கள் தொடர்பான பா. வெளியான வசூல் அறிவிப்புகள் எல்லாம் பொய் என்பது போல ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளார்.
ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ படங்களின் வசூலையே வடை சுடுறாங்க என கலாய்த்த ப்ளூ சட்டை மாறன் இந்த பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே அருண் விஜய்யின் மிஷன் பார்ட் 1 படம் மட்டுமே நல்லா இருக்கு என்றும் மற்ற படங்கள் எல்லாம் ஃபிளாப் என கூறியுள்ளார்.
கேப்டன் மில்லர் 70 கோடி வசூலை ஈட்டியதாக வெளியான செய்தியை பார்த்த ப்ளூ சட்டை மாறன் “உருட்டு உருட்டு” என கலாய்த்துள்ளார். கேப்டன் மில்லர் படம் கதையே சரியாக இல்லை என்றும் குற்றாலத்திற்கு போய் விட்டு குழாய் தண்ணீரில் குளித்தது போலத்தான் படம் இருந்தது என பங்கம் செய்திருந்தார் ப்ளூ சட்டை மாறன்.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தையும் தனது விமர்சனத்தில் கழுவி ஊற்றியிருந்தார் ப்ளூ சட்டை மாறன். மேலும், தனிப்பட்ட முறையிலும் சிவகார்த்திகேயனை அயலான் படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை வைத்தும் தாக்கி ட்வீட் போட்டிருந்தார்.
தப்பு செய்ய வாய்ப்பு இருந்தும் கண்ணியமா இருந்தா நீ வேறலெவல் என்கிற வரிகளை எல்லாம் சிவகார்த்திகேயனுக்கு வைக்கலாமா? என இமான் விவகாரத்தை வைத்து பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், அயலான் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நம்ப மாட்டேன் என கெட்ட வார்த்தையை போட்டு பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
அயலான் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் 50 கோடியை கடந்து விட்டதாக இரு தினங்களுக்கு முன்னதாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட நிலையில், தற்போது 60 கோடிக்கும் அதிகமாக வசூல் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.