விடாமுயற்சியை ஓவர்டேக் செய்த GOAT…? ஆரம்பமே அமர்க்களமா இருக்கே
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதேபோல், விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸில் விஜய்யின் GOAT தான் லீடிங்கில் இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தாண்டு பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்கள் வெளியாகின. பல ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய், அஜித் படங்கள் ஒரே தேதியில் வெளியானதால் ரசிகர்களும் உற்சாகமாகினர்.
அதேநேரம் வாரிசு, துணிவு இரண்டுமே பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தன. இதனால், மீண்டும் விஜய் – அஜித் படங்கள் ஒன்றாக ரிலீஸாகுமா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் விடாமுயற்சி, GOAT இரண்டு படங்களின் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதில் அஜித்தின் விடாமுயற்சி ஓடிடி ரைட்ஸ் குறித்து நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
ஆனால், விஜய்யின் GOAT ஓடிடி ரைட்ஸ் பற்றி அபிஸியலாக அப்டேட் ஏதும் வெளியாகவில்லை. அதேநேரம் விடாமுயற்சி ஓடிடி ரைட்ஸ் 100 கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், விஜய்யின் GOAT ஓடிடி ரைட்ஸ் 125 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் விடாமுயற்சியை விட GOAT தான் ஓடிடி ப்ரீ ரிலீஸ் பிஸினஸில் மாஸ் காட்டியுள்ளதாக தெரிகிறது.
அதேபோல், விஜய்யின் லியோ படத்தின் ஓடிடி உரிமையும் 100 கோடிக்கும் மட்டுமே விலை போனது. இதனையும் சேர்த்து தற்போது விஜய்யின் GOAT பிரேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கியமாக GOAT படத்தின் ஓடிடி உரிமை இதுவரை தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்திற்கு மட்டுமே 125 கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது. இதனால் GOAT ரிலீஸுக்கு முன்பே 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.