Lal Salaam: தியேட்டரில் மொய்க்காத கூட்டம்.. முதல் நாளே இப்படியா?
ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படம் ரஜினிகாந்தை தான் முன்னிலைப்படுத்தி ஆடியோ லாஞ்ச் முதல் அனைத்து புரமோஷன்களும் நடைபெற்றன.
ஆனால், இன்று வெளியாகி உள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறாதாது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு முதல் நாள் மட்டுமின்றி ஒரு வாரத்துக்கு டிக்கெட் புக்கிங் அனல் பறக்கும். முதல் நாள் டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் அலைமோதுவார்கள்.
ஆனால், இது நேரடி ரஜினிகாந்த் படம் இல்லை என்பதை ரசிகர்கள் நன்கு புரிந்து வைத்துக் கொண்டது தான் இந்த நிலைமைக்கு காரணமா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.
லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் எனும் கேங்ஸ்டராக ரஜினிகாந்த் எக்ஸ்டன்டட் கேமியோ ரோலில் விக்ராந்துக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். முதல் 15 நிமிடங்கள் வரும் அவர், அதன் பின்னர் கடைசி கிளைமேக்ஸில் தான் வருகிறார் என்றும் அதிரடியான ஒரு சண்டைக் காட்சி இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.
ஆனால், முதல் நாளில் மொய்தீன் பாயை நம்பி லால் சலாம் படத்தை வாங்கிய பல தியேட்டர்களில் முதல் ஷோவே ஹவுஸ்ஃபுல் ஆகாமல் பச்சை நிறத்தில் பல்லிளித்துக் கொண்டிருப்பது ரஜினிகாந்த் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
படத்தின் கருத்து நல்லா இருந்தாலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மேக்கிங் ஸ்டைல் படத்தை டல் அடிக்க வைத்து இருப்பதாகவும் இந்த படம் இடைவேளை வரை சுமாராக செல்வதாக ட்விட்டரில் ரசிகர்கள் விமர்சனங்களை போட்டுத் தாக்க ஆரம்பித்து விட்டனர்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள கிரிக்கெட் மத அரசியல் படமாகத்தான் இதனை ரசிகர்கள் பார்த்து விட்டு தியேட்டர் பக்கம் படையெடுக்காமல் உள்ளதாக கூறுகின்றனர்.
புக் மை ஷோவில் சென்னையில் லால் சலாம் படத்தை வெளியிட்ட பல தியேட்டர்களில் முதல் ஷோ கூட அப்படியே பச்சை நிறமாக காட்சியளிப்பது ரசிகர்களை மட்டுமின்றி தியேட்டர் உரிமையாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.