செத்து செத்து விளையாடிய பூனம் பாண்டேவுக்கு பேரதிர்ச்சி
நடிகை பூனம் பாண்டே கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறந்து விட்டதாக நாடகமாடிய நிலையில் அவர் மீது 100 கோடி ரூபாய் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கடந்த இரண்டாம் தேதி கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக காலமாகிவிட்டதாக அவரது மேலாளர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்ததை அடுத்து பாலிவுட் திரை உலகமே அதிர்ச்சி அடைந்தது.
ஆனால் திடீரென அடுத்த நாளே நான் சாகவில்லை என்றும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதுபோல செய்தேன் என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதனை அடுத்து பூனம் பாண்டேவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இறப்பு என்பது பூனம் பாண்டேவுக்கு விளையாட்டாகி விட்டதா? என்று கடும் விமர்சனங்கள் செய்தனர். மேலும் பூனம் பாண்டே மீது கிரிமினல் வழக்கு கூட பதிவு செய்யலாம் என்றும் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கான்பூர் காவல் நிலையத்தில் அன்சாரி என்பவர் பூனம் பாண்டே, அவரது கணவர், மேலாளர் ஆகியோர் மீது 100 கோடி ரூபாய் அவதூறு ரூபாய் கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். இதை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாகவும் இருவரையும் விசாரணை செய்ய சம்மன் பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பூனம் பாண்டே தனது சொந்த விளம்பரத்திற்காக இது போன்று விளையாடி உள்ளார் என்றும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையில் அவர் விளையாடி உள்ளார் என்றும் அன்சாரி புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பூனம் பாண்டேவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மரண நாடாக நடத்திய அவருக்கு கடுமையான தண்டனை மற்றும் பல கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரும் நிலைமை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.