மோகன் கடைசி வரை அதை செய்யவே இல்லை.. பாராட்டிய பிரபலம்
மைக் மோகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் மோகன், மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
மூடு பனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்தார்.
80 மற்றும் 90கால கட்டத்தில் பிஸியாக நடித்து வந்த மோகன் திடீரென சினிமாவை விட்டு காணாமல் போனார்.
தற்போது, விஜய்யின் தளபதி68 படமான கோட் படத்தில்,வில்லனாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள். இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்க, லைலா, பிரபுதேவா, சினேகா, பிரசாந்த், மைக் மோகன், அஜ்மல், வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, பார்வதி மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.
கதாநாயனாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்த மைக் மோகன், கோட் படத்தில் வில்லன் அவதாரம் எடுத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைக் மோகன் குறித்து, யார் படத்தை இயக்கிய யார் கண்ணன் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.
இந்நிலையில் மைக் மோகன் குறித்து பேட்டி அளித்துள்ள இயக்குநர் கண்ணன்,
மிகச்சிறப்பான நடிகராக திகழ்ந்த மைக் மோகன், நடிகர் திலகம் சிவாஜியைப் போல, கடைசி வரை தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்ளாமல் இருந்தார். மேலும், பல படங்களை இயக்க உதவியும் செய்தார்.
இவர் நினைத்து இருந்தால் தனது சம்பளத்தை பன்மடங்காக உயர்த்தி இருக்கலாம். ஆனாலும் தனது சம்பளத்தை கட்டுக்குள் வைத்து, பல படங்களில் நடித்து பல இயக்குனர்களின் வாழ்க்கையை சிறக்க வைத்திருந்தாரர் என்று யார் கண்ணன் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.