3 படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? தனுஷ் மனைவியின் தில்லாலங்கடி
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் 3. அதிலுள்ள அனைத்து பாடல்களும் இன்றுவரை ஒளித்துக்கொண்டுதான் இருக்கின்றது.
இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், சிவகார்த்திகேயன், ரோகிணி, சுனிதா, பானுபிரியா, பிரபு, கேப்ரியல்லா எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
3 திரைப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகும் நிலையில், இந்த திரைப்படம் பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால் ஐஸ்வர்யா, 3 படத்தில் முதல் முதலில் ஹீரோயினாக நடிக்க வைக்க ஸ்ருதி ஹாசனிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் அப்போது ஸ்ருதி ஹாசன் கால் சீட் கொடுக்க முடியாததால் ஸ்ருதி ஹாசனுக்கு பதில் அமலா பாலை கமிட் செய்துள்ளனர். அதன் பின்னர் அமலா பால் தனுஷ் இடையிலான காட்சிகளை எடுக்கும் போது ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். உடனே அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதி ஹாசனை கமிட் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது விட்டதாக நினைக்கப்பட்ட இந்த ஜோடி மீண்டும் வேலையில்லா பட்டதாரி 1 மற்றும் வேலையில்லா பட்டதாரி 2இல் சேர்ந்து பட்டையை கிளப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.