நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய் இன்றி தனியாக வந்த சங்கீதா – வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா நீண்ட நாட்களாக பட விழாக்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்த நிலையில், தற்போது ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அவர் தருண் கார்த்தைகேயன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஐஸ்வர்யாவின் கணவர் தருண், இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தருணை அவர் மறுமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்த திருமணத்தில் நடிகர்கள் கார்த்தி, சூர்யா, சீயான் விக்ரம், கமல்ஹாசன், ரஜினிகாந்த், நடிகைகள் நயன்தாரா, பிரியா பவானி சங்கர், சுஹாசினி இயக்குனர்கள் மணிரத்னம், அட்லீ மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அதேபோல் இந்த திருமணத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் கலந்துகொண்டுள்ளார். கடந்த சில வருடங்களாக விஜய்யின் பட விழாக்கள் உள்பட சினிமா சம்பந்தமான எந்த நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டாமல் இருந்து வந்த சங்கீதா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்டார்.
அவருடன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மனைவி சுமா ஹாரிஸ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இந்த விழாவில் நடிகர் விஜய்யால் பங்கேற்க முடியவில்லை. ஏனெனில் அவர் கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் இருப்பதால் அவருக்கு பதில் அவரது மனைவி பங்கேற்றிருக்கிறார். நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சங்கீதாவின் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.