குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் இணையும் 90’s கனவு கன்னிகள்…

குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் இணையும் 90’s கனவு கன்னிகள்…
  • PublishedApril 29, 2024

நடிகர் அஜித்குமாரின் 62-வது படமான விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட் ஆனார் அஜித். அப்படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார்.

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்கிற தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி நடிகர், நடிகைகள் தேர்வும் நடக்கிறது.

அந்த வகையில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில், தற்போது அப்படத்தில் மேலும் இரண்டு 90ஸ் நாயகிகள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் வேறு யாருமில்லை நடிகைகள் மீனா ம்ற்றும் சிம்ரன் தான். இவர்கள் இருவருமே தனித்தனியாக அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், முதன்முறையாக இருவரும் சேர்ந்து அஜித்துடன் நடிக்க உள்ளனர்.

குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு முதலில் ஜூன் மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

அதன்படி விடாமுயற்சி ஷூட்டிங் தாமதம் ஆவதால் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதமே தொடங்க உள்ளதாம். அப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த பின்னரே அஜித் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *