“சண்டை வேண்டாம்” திரைத்துறையினரிடம் கெஞ்சும் கமல்ஹாசன்
நடிகர் கமல் ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துவருகிறார். அவர் நடிப்பில் இந்தியன் 2 படமும் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் தன்னுடைய திரைத்துறையினருக்கு கமல் ஹாசன் ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார்.
கமல் ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலுக்கு சென்றார். ஆனால் அங்கு அவர் எதிர்பார்த்தபடி சூழல் சாதகமாக அமையவில்லை. அதனையடுத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவர் விக்ரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். படம் மெகா ஹிட்டானது.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிறுவனர் டி.இராமானுஜத்தின் நூற்றாண்டு விழா மயிலாப்பூரில் இருக்கும் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கலந்துகொண்டார்.
அதில் கமல் ஹாசன், பாக்யராஜ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் கலந்துகொண்டார். அப்போது பேசிய கமல், “இது ஒரு குடும்ப விழா. என்னை அழைத்திருக்காவிட்டாலும் நான் வந்திருப்பேன். நமது குடும்பம் மிக மிக சிறியது.
இந்த குடும்பத்துக்குள் பல விவாதங்கல் வரும், சிக்கல்கள் வரும், எதிரும் புதிருமாக பேச வேண்டியிருக்கும். அதற்காக ஒருவரையொருவர் திட்டிக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. டி.இராமானுஜத்தை திரையுலகின் தந்தை என்று சொல்வது பொருத்தமானது. இவருக்கு விழா எடுக்க வேண்டும் என்று யாருக்கெல்லாம் தோன்றியதோ அவர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.