அஜித்துடன் மோதப்போகும் சூர்யா? கங்குவா ரிலீஸ் குறித்த புதிய செய்தி

அஜித்துடன் மோதப்போகும் சூர்யா? கங்குவா ரிலீஸ் குறித்த புதிய செய்தி
  • PublishedJune 20, 2024

சூர்யா தமிழ் சினிமாவிற்குள் நுழையும்போது சிவக்குமாரின் மகன் என அடையாளப்படுத்தப்பட்டார். இன்றைக்கு சூர்யாவின் அப்பா சிவக்குமார் எனக் கூறும் அளவிற்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாறியுள்ளார்.

சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம்.

இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகின்றார். இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனது. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டது எனவும் தற்போது கம்யூட்டர் க்ராஃபிக்ஸ் வேலைகள்தான் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே பொங்கல் ரிலீஸில் அஜித் மற்றும் விஜயுடன் மோத நினைத்த சூர்யா இப்போது அஜித்தின் விடாமுயற்சியுடன் மோதவுள்ளார் எனவும் பேச்சுகள் எழுகின்றது. அதேபோல் தி கோட் படம் செப்டம்பரில் ரிலீஸ் ஆவது ஒருவேளை தள்ளிப்போனால் வரும் ஆண்டு தீபாவளியில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தீபாவளியாக அமையும் எனவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *