கல்கி 2898 AD – 8 நாட்களில் உலகளவில் இத்தனை கோடி வசூலா?
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், சுமார் 600 கோடி பட்ஜெட்டில் வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 AD’. ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
வெளியான முதல் நாள் முதல் நாளே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களும், பிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளும் குவிந்தன.குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நாக் அஸ்வின் ‘கல்கி’ படத்தின் மூலம் இந்திய திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார்.
மேலும் இப்படம் வெளியான முதல் நாளே, இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத வகையில், முதல் நாளே 191.5 கோடி ரூபாய் மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்தது. இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது. 4 நாட்களில் சுமார் 500 கோடியை கடந்த இப்படம், 8 நாட்களில் இதுவரை சுமார் 800 கோடியை உலக அளவில் கடந்து விட்டதாக தெரிவித்துள்ளார் ரமேஷ் பாலா.
‘கல்கி’ படத்தில் பிரபாஸை தவிர அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்துள்ளனர். கூடிய விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.