விஜய்யின் மாநாட்டில் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பேன் – விஷால்
சென்னையில் நடைபெற்ற தனியார் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில், கலந்து கொண்ட விஷால், விஜய்யின் தவெக மாநாட்டிற்கு அழைப்பு வரவில்லை என்றாலும், வாக்காளர் என்ற முறையில் மாநாட்டில் ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பேன் என்றார்.
விஜய்யின் தவெக மாநாட்டில் பங்கேற்பீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேட்க, நானும் ஒரு வாக்காளர் என்ற முறையில் மாநாட்டுக்கு செல்வேன். அவர் என்ன சொல்ல போகிறார், இப்போது இருக்கும் அரசியல்வாதிகளை விட மக்களுக்கு அவர் என்ன நல்லது செய்யப்போகிறார் என்று ஒரு வாக்காளராக ஓரமாக நின்று பார்ப்பேன்.
இதற்கு அழைப்புவிடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூட்டத்தோட கூட்டமா ஓரமா நின்னு வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். இதற்காக தமிழக வெற்றிக்கழகத்தோடு இணைகிறேன் என்று சொல்லிவிட முடியாது, முதலில் அவர் முதல் அடி எடுத்துவைத்து மாநாடு நடக்கட்டும், அதில் அவர் என்ன சொல்ல வருகிறார், கட்சியின் கொள்கை என்ன என்று பார்க்கலாம் என்றார்.
இதைத்தொடர்ந்து அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வரி நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இது அவர்களின் சர்ச்சை, அவர் அவர்களின் கருத்து இதில் நான் கருத்து சொல்லும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை, என்னை பொறுத்தவரை, நாலு பேருக்கு சோறு போட்டேனா, பெண்களை படிக்க வைத்தேனா என்று யோசிப்பேன் என விஷால் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.