சூப்பர் ஹீரோவாகராகவா லாரன்ஸ்… 25ஆவது படத்தின் அறிவிப்பு வெளியானது

சூப்பர் ஹீரோவாகராகவா லாரன்ஸ்… 25ஆவது படத்தின் அறிவிப்பு வெளியானது
  • PublishedOctober 29, 2024

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

சமூக அக்கறையுடன் பல சமூக பணிகளையும் மேற்கொண்டுவரும் ராகவா லாரன்ஸ் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளையொட்டி அவரது 25வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்குப்பட இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் தன்னுடைய 25வது படத்தில் நடிக்கவுள்ளார் ராகவா லாரன்ஸ்.

இந்தப் படத்தை நீலத்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சூப்பர் ஹீரோ படமாக உருவாகவுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாகவும் தயாராகவுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் ராகவா லாரன்சின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு கால பைரவா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் புல்லட் படத்தின் புதிய போஸ்டரும் அவரது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவரது தம்பி எல்வின் முக்கியமான கேரக்டரில் நடித்துவரும் நிலையில் படத்தை இன்னாசி பாண்டியன் இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் இன்று மாலை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *