விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு… காரணம் என்ன?

விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு… காரணம் என்ன?
  • PublishedDecember 1, 2024

தனுஷ் – நயன்தாரா இருவருக்கும் ஏற்ப்பட்ட சர்ச்சை பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது.

விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் பட ஷூட்டிங்கில் தான் நயன்தாரா உடன் காதல் மலர்ந்தது.

திருமண ஆவணபடத்தில் நானும் ரௌடி தான் பட காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி கேட்டு விக்கி மற்றும் நயன் இருவரும் இரண்டு வருடமாக கோரிக்கை வைத்தார்களாம்.

ஆனால் அதற்கான அனுமதி தனுஷ் தரவே இல்லை என்ற நிலையில், NOC இல்லாமலேயே அதை வீடியோவில் பயன்படுத்தினார்கள். அதற்கு நஷ்டஈடு கேட்டு தனுஷ் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

இது ஒருபக்கம் இருக்க விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் தான் அஜித்துக்காக எழுதிய கதை எப்படிப்பட்டது என கூறி இருந்தார். அது காமெடி கதை என சொல்லி தயாரிப்பாளர் நிராகரித்ததால் படம் டிராப் ஆகிவிட்டது என விக்னேஷ் சிவன் கூறி இருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் கணக்கை டெலீட் செய்துவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் வந்த விமர்சனங்களால் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்தாரா? அல்லது இவருடைய கணக்கு ஹெக் செய்யப்பட்டதா என்பது புரியாமலேயே உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *