நானும் அக்காவும் பிரிவதற்க்கு என்ன மனைவி தான் காரணம்?…நகுல்

நானும் அக்காவும் பிரிவதற்க்கு என்ன மனைவி தான் காரணம்?…நகுல்
  • PublishedJune 26, 2025

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை தேவயானி. முன்னணி ஹீரோக்களுடன் நடித்து புகழ் பெற்ற தேவயானி, தற்போது இரு பெண்களுக்கு தாயாக இருந்து கொண்டும் நடித்து வருகிறார்.

இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி தேவயானி திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து தன் குடும்பத்தைவிட்டு விலகி தன் கணவருடன் வாழ்ந்து வந்த தேவயானி, தன்னுடைய தம்பியும் நடிகருமான நகுலுடன் சமீபத்திய பேட்டிகளில் கலந்து கொண்டு சில விசயங்களை பகிர்ந்திருந்தார்.

தற்போது தேவயானி தன் மகள் இனியாவை சரிகமப சீனியர் 5ன் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் நகுல் அளித்த பேட்டியொன்றில், தேவயானிக்கும் தம்பிக்கும் சண்டை, ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டது நகுலுக்கு பிடிக்கவில்லை என்பதால், அக்காவை ஒதுக்கி வைத்துவிட்டார் என்று கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் போடுவார்கள்.

அதுமட்டுமில்லாமல், என் மனைவி ஸ்ருது, அக்காவையும் தம்பியையும் பிரித்துவிட்டார் என்றெல்லாம் சொல்லுவதை பார்க்கும் போது, முதலில் கோவம் வந்தது, இப்போது அதைக்கேட்டால் என்னடா சீரியல் போல பேசுறீங்க என்று தான் சொல்லத் தோன்றுகிறது என்று நகுல் சிரித்தபடியே பதிலளித்திருக்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *