நான் விஜயுடைய die-hard ரசிகை விட்டுகொடுக்க முடியாது… ஸ்வாசிகா

நான் விஜயுடைய die-hard ரசிகை விட்டுகொடுக்க முடியாது… ஸ்வாசிகா
  • PublishedJune 29, 2025

தென்னிந்திய நடிகையாக பல படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்வாசிகா, லப்பர் பந்து, ரெட்ரோ, மாமன் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது சூர்யாவின் கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யின் தீவிர ரசிகையான ஸ்வாசிகா, சமீபத்தில் விஜய் குறித்து சொன்ன விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதில், விஜய் சாரை நான் படங்களில் நடிப்பதற்கு முன்பே பிடிக்கும். நான் அவருடைய die-hard ரசிகை. இப்போது சினிமாவுக்கு வந்ததுக்கு அப்புறம் மத்தவங்க கோச்சுப்பாங்க என்பதற்காக நான் எப்படி விஜய் சாரை விட்டுக்கொடுக்க முடியும்.

மற்ற நடிகர்கள் கூட நடிப்பது, அவங்க எல்லாரும் நல்ல நடிகர்கள் அது வேற, ஆனால் die-hard ரசிகை என்றால் அது ஒருத்தருக்கு தான் இருக்க முடியும் என்று உறுதியுடன் கூறியிருக்கிறார். ஸ்வாசிகா பேசியது விஜய் ரசிகர்கள் மத்தியில், தற்போது அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *