தனுஷ்-க்கு நயன் மீது மட்டும் ஏன் போபம்? விஜய்க்கு செய்த உதவி லீக்

தனுஷ்-க்கு நயன் மீது மட்டும் ஏன் போபம்? விஜய்க்கு செய்த உதவி லீக்
  • PublishedJuly 9, 2025

தனுஷ்-க்கு நயன் மீது மட்டும் ஏன் போபம்? விஜய்க்கு செய்த உதவி பற்றி தெரியுமா?

காப்பிரைட் விவகாரத்தில் நயன்தாராவிடம் 10 கோடி கேட்ட தனுஷ், தற்போது சைலண்டாக நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு உதவி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். அண்மையில் குபேரா திரைப்படம் தமிழில் தோல்வி அடைந்தாலும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

அதன்பின்னர் இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி உள்ள தேரே இஸ்க் மெயின் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.

இதுதவிர தனுஷ் இயக்கி, நடித்துள்ள இட்லிக்கடை திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இப்படி பிசியான ஹீரோவாக வலம் வந்தாலும் தனுஷ் கடந்த ஆண்டு நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ இடம்பெற்றிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுஷ் அந்த வீடியோ காட்சியை நீக்காவிட்டால் தனக்கு 10 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதனால் டென்ஷன் ஆன நயன்தாரா, தனுஷை சரமாரியாக சாடி அறிக்கை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக நயன்தாரா மீது தனுஷ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படக்குழுவுக்கு தனுஷ் செய்துள்ள உதவி பற்றிய தகவலும் வெளியாகி வைரலாக பேசப்பட்டு வருகிறது.

அதன்படி தனுஷ் படத்திற்காக ரூ.4 கோடி செலவில் பிரம்மாண்ட செட் ஒன்று போடப்பட்டதாம். அந்த செட்டில் தனுஷ் பட ஷூட்டிங் முடிவடைந்ததை அடுத்து, விஜய்யின் ஜன நாயகன் படக்குழு, தங்கள் படத்தின் பாடல் காட்சியை படமாக்கிக் கொள்ள அனுமதி கேட்டிருக்கிறார்கள்.

இதை அறிந்த தனுஷ், உடனே ஓகே சொல்லிவிட்டாராம். சிம்பு, விஜய் படங்களுக்கு இலவசமாக வாரி வழங்கிய தனுஷ், நயன்தாராவிடம் மட்டும் ஏன் பணம் கேட்டார். அவர்மீது அம்புட்டு கோபமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *