ஒரு பாடலுக்கு நடிகை தமன்னாவிற்கு…இத்தனை கோடி சம்பளமா?
நடிகை தமன்னா, தற்போது நடிப்பை தாண்டி நடனத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபகாலமாக சிறப்பு பாடல்களில் கிளாமர் நடனத்தில் தொடர்ந்து தமன்னாவை பார்த்து வருகிறோம்.

ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு இவர் நடனமாடியது உலகளவில் வைரலானது. இந்த பாடலில் நடனமாடுவதற்காக இவர் ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.
இந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஸ்ட்ரீ 2 படத்தில் நடனமாட ரூ. 1 கோடியும், ரெய்டு 2 படத்தில் நடனமாட ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார்.

தொடர்ந்து தனது கிளாமர் நடனத்தின் மூலம் கவனத்தை ஈர்த்து வரும் தமன்னா, அண்மையில் வெளிவந்த பேட்ஸ் ஆஃப் பாலிவுட் வெப் தொடரில் நடனமாட ரூ. 6 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். இந்த வெப் தொடரை ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.