ஹிஜாப் அணிந்து சென்று சர்ச்சையில் சிக்கிய தீபிகா படுகோன்

ஹிஜாப் அணிந்து சென்று சர்ச்சையில் சிக்கிய தீபிகா படுகோன்
  • PublishedOctober 9, 2025

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான தீபிகா படுகோன் குறித்த செய்திகள் தான் தற்போது வைரலாகி வருகின்றது.

இவர்கள் இருவரும் புகழ்பெற்ற ஷேக் சயீத் கிராண்ட் மசூதிக்கு விளம்பரத்திற்காக செல்லும் போது ரன்வீர் சிங் ஷெர்வானி போன்ற ஒரு உடையிலும் தீபிகா படுகோன் உடல் முழுவதும் ஹிஜாப் போன்ற ஒரு உடையில் முகம் மட்டும் தெரிந்தபடி அணிருந்திருந்தார்.

இந்த உடையை அபயா என்றும் கூறப்படுகிறது. இது தற்போது சமூக வலைதளத்தில் கிண்டலுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது.

ஒரு தரப்பினர், இந்து மரபுகளை அவர் அவமதிப்பதாகவும் பெண் சுதந்திரத்தைப் பற்றி பேசும் ஒருவர் எப்படி மத நம்பிக்கைக்குக் கட்டுப்படுகிறார் என்றும் விமர்சிக்கத் தொடங்கினர்.

அதேபோல் சிலர் அந்த மசூதிக்கு செல்லும் போது பெண் சுற்றுலா பயணிகள் தலையை மறைக்கும் படி உடை அணிய வேண்டும் என கூறி வருகின்றனர்.

மேலும் பல கிறிஸ்தவ பிரபலங்களும் இப்படித்தான் செல்கிறார்கள் எனவும் இதை விமர்சிப்பதை நிறுத்துங்கள் எனவும் பதிவிடுகின்றனர்.

இது தொடர்பாக தீபிகா படுகோனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் இணையத்தில் உலா வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *