இன்றுடன் 25ஆவது நாள் : மொத்த வசூல் விபரம் வெளியானது

இன்றுடன் 25ஆவது நாள் : மொத்த வசூல் விபரம் வெளியானது
  • PublishedNovember 10, 2025

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற படம் பைசன் காளமாடன்.

இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன், லால், அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தீபாவளி ரேஸில் குதித்த 3 படங்களிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்ற படம் என்றால் அது பைசன் தான்.

பைசன் படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் இன்றுடன் பைசன் படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகியுள்ளன.

இதுவரை உலகளவில் இப்படம் 79.9 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *