சமந்தா கோயம்புத்தூரில் திடீர் திருமணம்! வைரலாகும் படங்கள்

சமந்தா கோயம்புத்தூரில் திடீர் திருமணம்! வைரலாகும் படங்கள்
  • PublishedDecember 1, 2025

சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணம் கோயம்புத்தூரில் இன்று நடைபெற்றது.

நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு சமந்தா பல கஷ்டங்களை சந்தித்தார். அதில் வெற்றியும் கண்டார். பின் ராஜை காதலித்தார். இன்று காலை நடிகை சமந்தாவின் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

சமந்தாவின் திருமண விழா கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. பைரவி கோவிலில் சமந்தா, ராஜ் நிடிமோரு திருமணம் நடந்தது.

இதில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. சமந்தா, ராஜ் விரைவில் தங்கள் திருமணத்தை ரசிகர்களுக்கு அறிவிப்பார்கள் என தெரிகிறது.

சமந்தாவைப் போலவே ராஜுக்கும் இது இரண்டாவது திருமணம். சமந்தாவுக்கு 38, ராஜ் நிடிமோருவுக்கு 46 வயது.

இன்று காலை முதலே சமந்தாவின் திருமண செய்தி தான் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து இருந்தது.

இந்நிலையில், நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *