டிராகன் 2 வரப்போகுதா – அந்த ஒரு ‘ஹிண்ட்’

டிராகன் 2 வரப்போகுதா – அந்த ஒரு ‘ஹிண்ட்’
  • PublishedFebruary 21, 2026

கடந்த ஆண்டு வெளியாகி இளைஞர்களின் இதயங்களை வென்ற ‘டிராகன்‘ (Dragon) திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வமான ‘க்ளூ’ (Hint) வெளியாகி, தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. இந்த விசேஷ நாளைக் கொண்டாடும் விதமாக, படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது ‘X’ தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “நண்பர்கள் வேலைக்காக ஒன்று சேரும்போது உறவுகள் பந்தயத்தில் இருக்கும், ஆனால் அதே பந்தயம்தான் சிறந்த படைப்பைக் கொடுக்கத் தூண்டுகிறது. பிரதீப், இன்னும் வளரு!” என்று குறிப்பிட்டிருந்தார்.

பதிவின் இறுதியில் அவர் சேர்த்திருந்த “WE WILL COME BACK ‘2’nd TIME” என்ற வாசகமும், அதனுடன் இருந்த ஒரு சிமிட்டும் கண்ணும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இயக்குநரின் பதிவிற்குப் பதிலளிக்கும் விதமாக பிரதீப் ரங்கநாதன் ,” நண்பன் டூ இயக்குநர் என்ற மாற்றம் எனக்குச் சற்று நேரமெடுத்தது. ஆனால் இப்போது எனக்கு இரண்டுமே சிறப்பாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டு இரண்டு டிராகன் பொம்மைகள் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “Coming soon” (விரைவில்) என்று பதிவிட்டுள்ளார்.

இரண்டு டிராகன் பொம்மைகள் என்பது ‘டிராகன் 2’ (Dragon 2) என்பதையே மறைமுகமாகக் குறிப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *