Ak ஐ ரேசிங் களத்தில் சந்தித்த பிரபல நடிகை – கூறியது என்ன?
சினிமாவைத் தாண்டி கார் ரேசிங்கில் பெரும் ஆர்வம் கொண்டவராக அறியப்படும் நடிகர் அஜித் குமார், சமீபகாலமாக தனது ரேசிங் நடவடிக்கைகளில் பிஸியாக உள்ளார். இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியர் அஜித்தின் ரேசிங் இடத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, மஞ்சு வாரியர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ள விடயம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
அவர் பதிவிட்டுள்ள குறிப்பில், “AK சார், உள்ளத்தில் எரியும் ஆர்வத்தை எப்படி தேடிப் பின்தொடர வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி. மேலும், உங்கள் ரேசிங் பிட்டில் எங்களை அன்புடன் வரவேற்று, நேரில் த்ரில்லிங் ரேசை பார்க்க வைத்ததற்கு மனமார்ந்த நன்றி. அது ஒரு அருமையான அனுபவம்.” என்று தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்ட குறித்த பதிவும். அஜித்துடன்அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.