சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாகும் பிரபல நடிகை.

சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாகும் பிரபல நடிகை.
  • PublishedFebruary 26, 2026

பிரபல இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் அப்பா, மகன் என 2 வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கஉள்ளார்.மேலும் அப்பாவுக்கு ஜோடி ரம்யா நம்பீசன், மகனுக்கு ஜோடி கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சேதுபதி, பீட்சா, சத்யா, குள்ளநரிக்கூட்டம், தர்மதுரை’ போன்ற சிறந்த படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரம்யா நம்பீசன் உடல் எடை அதிகரிப்பு காரணமாக சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்காமல் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.சயின்ஸ் பிக்சன் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *