மார்ச் 17ம் திகதிக்குள் ஜனநாயகன்

மார்ச் 17ம் திகதிக்குள் ஜனநாயகன்
  • PublishedMarch 5, 2026

தளபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும். ஜனநாயகன்’ படம் கடந்த ஜனவரி ஒன்பதாம் திகதி பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று சென்சார் போர்டு கூறியதால் அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் படக்குழு வழக்கு தொடுத்தது.

இதன்போது நீதிபதி ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் கொடுக்குமாறு உத்தரவிட்டதை அடுத்து அதை எதிர்த்து சென்சார்போர்டு மேல்முறையீடு செய்தது. பின்னர் ஜனநாயகன் படக்குழு உச்சநீதிமன்றத்திற்கு சென்றார்கள் இதனால் நாட்கள் கடந்து கொண்டே போன நிலையில்தான் ,வழக்கை திரும்பப் பெற்ற ஜனநாயகன் படக்குழு மறு தணிக்கை குழுவிடம் படத்தை ஒப்படைத்தது.

இந்நிலையில் வருகிற மார்ச் 17ம் திகதிக்குள் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் கொடுத்து விடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் ஜனநாயகன் படத்தை உடனடியாக வெளியிடாமல் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு வெளியிடுவதற்கு அப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *