தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் திடீர் விலகல்
ஜீ தமிழில் ஒளிபரப்பப்படும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் விலகியுள்ளார்.
உதவி இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய கரு பழனியப்பன் அதன் பின் பார்த்திபன் கனவு என்ற படத்தை இயக்கி இயக்குனராக கால் பதித்தார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் சினேகா உள்ளிட்டோர் நாடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதற்காக அவர் சிறந்த இயக்குனர் விருதை பெற்றார். தொடர்ந்து விஷாலின் சிலப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம், ஜன்னல் ஓரம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இவர் சிறந்த பேச்சாளராகவும் இருந்து வருகின்றார்.
இயக்குனரான அவர் பட வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஜீ தமிழில் ஒளிபரப்பப்படும் தமிழா தமிழா நிகழ்ச்சியை சில வருடங்களாக தொகுத்து வழங்கி வருகின்றார்.
இயக்குனரான அவர் பட வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஜீ தமிழில் ஒளிபரப்பப்படும் தமிழா தமிழா நிகழ்ச்சியை சில வருடங்களாக தொகுத்து வழங்கி வருகின்றார்.
அந்த நிகழ்ச்சியில் திராவிட சித்தாந்தங்கள், பெண்ணுரிமை மற்றும் முற்போக்கு கொள்கைகளை பரப்பும் நோக்கத்தில் இவரது பேச்சும் ஆதரவும் இருக்கும். இதற்காக சமூக வலைதளங்களில் அவர் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வந்துள்ளார்.
இத்தகைய நிலையில் சமீபத்தில் தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடிய கரு பழனியப்பன் தனது சமூக வலைதள பக்கத்தில் தான் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது அந்த பதிவில், 4 வருடம் ஜீ தமிழ் உடனான எனது பயணத்தை முடிவுக்கு கொண்டு வருகிறேன். சுயமரியாதை, சமூகநீதி, திராவிடம் போன்ற சொல்லாடல்கள் பலருக்கும் கசப்பாய் இருக்கிறது. எனில், அந்த பயணத்தை முடித்துக் கொள்வதுதான் நல்லது.” என்று அவர் கூறியுள்ளார்