படத்தில் டைட்டில் பாடல்களை அறிமுகப்படுத்திய பாலச்சந்தரர் : காப்பியடித்த அனிருத்!
இப்போது திரை துறையில் பிரபலமாக இருக்கும் பல விஷயங்கள் அந்த காலத்திலேயே ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒன்றாக தான் இருக்கிறது. அதில் டைட்டில் பாடல், ஹீரோக்களின் அறிமுக பாடல் என பல விஷயங்கள் அந்த காலத்து ஜாம்பவான்களால் ஆரம்பிக்கப்பட்டு இப்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
இந்த விடயம் ஆரம்பத்தில் பாலச்சந்தர் இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடலை 2013 ஆம் ஆண்டு வெளிவந்த சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்திற்காக அனிருத் ரீமேக் செய்திருந்தார்.
அப்போது இந்த காலத்திற்கு ஏற்ப பாடலின் சில வரிகளை கவிஞர் வாலி மாற்றி அமைத்தாராம். அந்த வகையில் வாழ்க்கையில் ஜெயிக்க போராடுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்திருந்த அந்த பாடல் இப்போதும் கூட அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
இது எல்லாவற்றிற்கும் மேலாக அந்த படம் தான் சிவகார்த்திகேயனுக்கு ஒரு திருப்பு முனையையும் ஏற்படுத்தியது.