வாணிபோஜனை வருத்தப்பட வைத்த ஜி.வி!
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் பேச்சுலர். இந்த படத்தில் ஆரம்பத்தில் ஹீரோயினாக திவ்யா பாரதி நடித்து அசத்தியிருந்தார்.
ஆனால் இந்த படத்தில் திவ்யா பாரதிக்கு முன்னதாக வாணிபோஜன் தான் நடிக்க இருந்தாராம். படத்தில் சில நெருக்கமான காட்சிகள் இருந்ததால் அந்த படமே வேண்டாம் என ஒதுங்கிக்கொண்டாராம்.
இயக்குனர் வாணிபோஜனுக்கு ஏற்ற மாதிரி சில காட்சிகளை மாற்றுவதாக கூறினாலும், அதனையும் வாணி போஜன் வேண்டாம் என்று கூறி படத்தை விட்டு விலகினாராம். ஆனால் பின் நாட்களில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் வெற்றிப்பெற்ற பிறகு படத்தை மிஸ் பண்ணிட்டோமே என்று கவலைப்பட்டதாக நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.