கமல்ஹாசன் தொடர்பிலான முக்கிய இரகசியங்கள் அம்பலம்
கமல்ஹாசன் ஒரு நடனப்பள்ளி வைத்திருந்ததாகவும் அந்தப் பள்ளிக்கு சிவாலயா என்று பெயர் வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் உலகநாயகனாக இருப்பவர் கமல்ஹாசன். சினிமா துறையில் பல புது தொழில்நுட்பங்களை புகுத்தியவர் இவர் என்றால் மிகையாகாது. எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தனது தத்துரூபமான நடிப்பின் மூலம் வெளிக்கொண்டு வருபவர் இவர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கடுமையாக உழைத்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து வருபவர்.
நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த இயக்குனராகவும், கதை ஆசிரியராகவும், நடன இயக்குனராகவும், பாடலாசிரியராகவும் பல பரிணாமங்களை கொண்டவர். கமல்ஹாசன் பொதுவாக நாத்திகர் என்ற கருத்து சினிமா உலகில் நடைபெறுகிறது. அவருடைய செயல்பாடுகளும் படத்தில இடம்பெற்றிருக்கும் வசனங்களும் அதையே நிரூபிக்கின்றன.
இவரது நாத்திக கருத்துகளால் இவரை போல புகழ்ந்தாலும் அதே காரணங்களால் பல்வேறு சர்ச்சைகளுக்கும் உள்ளாகி இருக்கிறார். இவரது திரைப்படங்கள் வெளிவரும் போதெல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சை வந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது கமல்ஹாசனை பற்றி யாரும் அறிந்திராத தகவல்களை வெளியிட்டு இருக்கிறார் காமெடி நடிகர் மீசை ராஜேந்திரன்.
அந்தப் பேட்டியில் கமல்ஹாசன் ஒரு நடனப்பள்ளி வைத்திருந்ததாகவும் அந்தப் பள்ளிக்கு சிவாலயா என்று பெயர் வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அவர் தேவாலயம் ஒன்றில் கீ போர்டு பிளேயராக இருந்ததாகவும் தெரிவித்திருக்கிறார் மீசை ராஜேந்திரன். கமல்ஹாசன் ஒரு நாத்திகராக இருந்தாலும் தனது பள்ளிக்கு சிவாலயா என்று பெயர் வைத்திருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார் அவர்.